வெல்க தமிழ்

வெல்க தமிழ்

கவிஞரைப் பற்றி

family

கவிஞர் பா.விஜய் ஆகிய நான் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தேன். எனது தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன், தாயார் பெயர் சரஸ்வதி ஆவார். எனது சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும். எனது துணைவியார் ர. லேனா ஆவார்கள். எனக்கு வி.விஷ்வா மற்றும் வி.விஸ்ணா என இரு மகன்கள் உள்ளன.

கல்வி

பள்ளிப்பருவம்

starசபர்பன் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பும், இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பும் முடித்தேன்.

கல்லூரி காலம்

starசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றேன்.

 • books
  55+

  புத்தகங்கள்

 • books
  200+

  கட்டுரைகள்

 • books
  3000+

  சினிமா பாடல்கள்

 • books
  1200+

  கவிதைகள்

 • books
  80+

  காணொளிகள்

சிறப்புகள்

 • 2004 -ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற தேசிய விருதினை "ஆட்டோகிராப் " திரைப்படத்தின் “ஒவ்வொரு பூக்களுமே” பாடலுக்குப் பெற்றது.
 • கலைஞர். திரு.மு.கருணாநிதி அவர்களிடம் "வித்தகக் கவிஞர்" என்ற பட்டம் பெற்றேன்.
 • காப்பிய கவிஞர் வாலி அவர்கள் தனது "கலையுலக வாரிசாக" அறிவித்தது.
 • 28.08.2004 அன்று இந்திய குடியரசு தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை குடியரசு மாளிகையில் சந்தித்து 30 நிமிடங்கள் கவிதை, திரைப்பாட்டு, இலக்கியம் பற்றி உரையாடியது.